அனிதா குறித்து கருத்து கூற மறுத்து வேகமாக கிளம்பிப் போன அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்!
அனிதாவின் மரணம் குறித்து கருத்து கூற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை : அரியலூர் அனிதாவின் தற்கொலை குறித்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்க முற்பட்ட நிலையில் அவர் எந்த பதிலையும் கூற மறுத்துவிட்டார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு குழுமூரில் அவரது வீடு அருகே உள்ள திடலில் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பாஜக அலுவலகத்தில் இருந்த அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் அனிதாவின் மரணம் குறித்து கருத்து கேட்க செய்தியாளர்கள் முற்பட்டனர்.
எனினும் அவர் எந்த கருத்தையும் கூறவில்லை. வேகமாக காரில் ஏறி சென்று விட்டார். தமிழகம் முழுவதும் பாஜக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications