For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுவதாக கூறினேன்..பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி நடப்பதாகத் தான் கூறியதாக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடியிடம் பொன்.ராதாகிருஷ்ணன் என்ன சொன்னார் தெரியுமா?- வீடியோ

    சென்னை : சட்டம் ஒழுங்கு பற்றி கருத்து தெரிவிக்கவில்லை என்றும், தமிழகத்தில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி நடப்பதாகத் தான் கூறியதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்திற்கு சென்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்தார்.

     Central and State need to act together says Pon Radhakrishnan

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் கண் புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவரை நலம் விசாரிப்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அவரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன். அப்போது, புதிதாக அமையவிருக்கும் துறைமுகம் திட்டம் குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து தான் பேசவில்லை என்றும், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி நடப்பதாகத் தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டால் தமிழக மக்களுக்கு பலன் கிடைக்கும் என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    English summary
    Central and State need to act together says Pon Radhakrishnan. Central minister for state Pon.Radhakrishnan meets TN CM Edappadi Palaniswamy in his home at chennai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X