மத்திய நீர் வாரியத்தின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி: சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு!
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சார்பில் தேவகோட்டை பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
தேவகோட்டை: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவிப்பெறும் பள்ளியில் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சார்பில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில் ஏரளாமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டன.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைநிலை பள்ளியில் மாணவர்களுக்கு மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் ஆசிரியை செல்வமீனாள் வரவேற்புரை வழங்கினார். தேவகோட்டை அரண்மனை அஞ்சலக தபால் அதிகாரி செல்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தாங்கினார்.

விழாவில் அஞ்சல் துறை காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் மாரியப்பன் ஓவிய போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரையாற்றினர். மத்திய நீர்வாரியம் சார்பில் நீரை சேமிப்போம், வருங்காலம் காப்போம் என்ற தலைப்பில் நீர் வண்ண பூச்சு ஓவிய போட்டிகள் நடைபெற்றது.

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் பள்ளி அளவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிகளில் பள்ளி அளவில் முதல் பரிசினை பரமேஸ்வரியும், இரண்டாம் பரிசினை பிரவீணாவும், மூன்றாம் பரிசினை காயத்ரியும் பெற்றனர்.

விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் அஞ்சல் துறையை சார்ந்த கதிரேசன்,வெங்கடேசன், அரவிந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications