மஸ்ரத் ஆலம் விடுதலை: பாஜகவின் இரட்டை வேடம் அம்பலம் – ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
சென்னை: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் ஒரு நிலைபாடும், டெல்லியில் ஒரு நிலைபாடும் கொண்டுள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தீவிரவாதம்-பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒரு போதும் ஏற்கமாட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாந்தோமில் நடந்த விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் த.மா.கா.வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் அடையாள அட்டையை வழங்கினார் ஜி.கே.வாசன்.
இணைப்பு விழாவின் போது ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

300 பேர் இணைப்பு
வடசென்னை, காஞ்சீபுரம், விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த சுமார் 300 பேர் இன்று த.மா.க.வில் தங்களை இணைத்துக்கொண்டு உள்ளனர்.

கட்சியின் பலம்
மாநிலம் முழுவதும் பலதரப்பினரும் எங்கள் இயக்கத்தில் சேருவதன் மூலம் கட்சியின் பலம் அதிகரித்து வருகிறது.

நியாயமான கோரிக்கை
நேற்று முதல் பார்வையற்ற சகோதர-சகோதரிகள் தங்களின் நியாயமான கோரிக்கைக்காக உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார்கள். அரசு அவர்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்ற வேண்டும்.

பாஜக அரசு
தீவிரவாதம்-பிரிவினைவாதம் ஆகியவற்றை ஒரு போதும் ஏற்கமாட்டோம். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் ஒரு நிலைபாடும், டெல்லியில் ஒரு நிலைபாடும் கொண்டு உள்ளதை கண்டிக்கிறோம்.

அதிகாரி தற்கொலை
நெல்லையில் வேளாண்மை துறை அதிகாரி மரணத்தில் ஏற்பட்டு உள்ள சந்தேகத்தை போக்க வேண்டியது அரசின் கடமை. சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் மூலம் உண்மை வெளிவரும் என்று நம்புகிறேன்.

ரணில் பேச்சுக்கு கண்டனம்
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மீனவர்களிடையே அச்சம்
அவரது பேச்சால் தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமரின் இலங்கை சுற்றுப்பயணம் அமைய வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications