ஜெ. தீர்ப்புக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பே கிடையாது... சொல்கிறார் எச். ராஜா
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மத்திய அரசு தலையிடவே இல்லை என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் கீழ் நீதிமன்றம் பிறப்பித்திருந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அப்பீல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்று நால்வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பையும் அவர் ரத்து செய்து விட்டார்.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கருத்து தெரிவிக்கையில், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பில் மத்திய அரசின் தலையீடு கிடையாது. அதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி இது - சரத்குமார் கருத்து
இதற்கிடையே, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கையில், சட்டத்தை மதித்து அமைதியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. சந்தில் சிந்து பாடி விடலாம் என்று நினைத்தவர்களின் நினைப்பு தோல்வியுற்று விட்டது.
தர்மத்திற்குக் கிடைத்த வெற்றி இது. கீழ் கோர்ட் தீர்ப்பை வழங்கியதுமே இது இறுதித் தீர்ப்பு அல்ல. மேல்முறையீடு செய்து சட்ரீதியாக நான் இதிலிருந்த மீண்டு வருவேன் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். அதேபோல இதுநாள் அவரை அமைதியாக இருந்து சட்டரீதியாக அவர் விடுதலையாகியுள்ளார் என்று கூறியுள்ளார் சரத்குமார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications