ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா என பிதற்றும் சு.சாமி மீது நடவடிக்கை எடுங்கள்: தா. பாண்டியன்
சென்னை: ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர்.சுப்பிரமணியசாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய-மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.
இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தையும் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காக இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் சகோதரர் வை.கோ.வும், பா.ம.க தலைவர் ராமதாசும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பா.ஜ.க.வுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்கட்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பெரியார் தி.க.:
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கு. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ராஜபக்சேவுக்கு விருது வழங்க தமிழ் மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள். அப்படி இருக்கையில் விருது வழங்கக் கோரிய சுப்பிரமணிய சாமியையும், அவர் இருக்கும் பாஜகவையும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications