ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் : ராஜேஷ் லக்கானி
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு குறித்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நிலவரம் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
பெரும் அமளிதுமளிக்கு நடுவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடந்து வருகிறது. காலை முதலே பெரும் ஆர்வத்துடன் மக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

வாக்குப்பதிவு நடைபெறும் 256 வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறை மற்றும் துணை ராணுவப்படை ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதற்கான ரிப்பன் மாளிகையில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் அந்த வீடியோக்களை பார்வையிட்டு கண்காணித்து வருகின்றனர். அதுபோல, தலைமை செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் வாக்குப்பதிவை கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கும்போது, ஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதுவரை எந்தவித பிரச்னையும் இல்லாமல், தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரம் அறிவிக்கப்படும் என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications