தமிழகத்தில் சில இடங்களில் மழை... சென்னையில் வெறும் மேகமூட்டம் மட்டும்: சொல்கிறது வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் , வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ; சென்னையில் மேகமூட்டம் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தற்போது தமிழகத்தை சுற்றியுள்ள கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியோ, காற்றழுத்த தாழ்வு பகுதியோ ஏற்பட வாய்ப்பு இல்லாததால் நிலப்பகுதியை நோக்கி மழை மேகங்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை வாய்ப்புகள் குறைந்துள்ளன.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பரங்கிப்பேட்டையில் 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், தூத்துக்குடியில் ஒட்டப்பிடாரம், நெல்லை பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 3 செ.மீ., சாத்தான்குளத்தில் 2 செமீ, மழை பதிவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டம் மதுக்கூர், கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, நெல்லை மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, நாகை மாவட்டம் ஆணைக்காரன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications