தமிழகத்தில் குளிர்கால மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவடையவில்லை என்றபோதும், நேற்று முதல் பெய்யக்கூடிய மழை குளிர்கால மழை என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8-30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு பின்வருமாறு:-
தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளியில் 9 செ.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூர், நத்தம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சி புரம் தலா 5 செ.மீ., மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, திருமங்கலம், கடலூர் மாவட்டம் தொழுதூர், திண்டுக்கல் தலா 4 செ.மீ.,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், சத்திரப்பட்டி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, தேனி மாவட்டம் பெரியகுளம், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தலா 3 செ.மீ., திருச்சி மாவட்டம் முசிறி, துறையூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, ராயகோட்டை, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
சிவகாசி, மேட்டூர், செங்கோட்டை, அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, சிவகங்கை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.
மிரட்டும் பனி:
சென்னையில் நேற்று காலையில் இருந்தே வானம் மேகமூட்டமாக இருந்தது. வெயில் அடிக்கவில்லை. பிற்பகல் நேரத்தில் சென்னை வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், தாம்பரம் முதலிய இடங்களில் மழை விட்டு விட்டுப் பெய்தது.
மார்கழி மாதத்தின் பனி பொழிவு அதிகளவில் இருப்பதால் இரவு 8 மணிக்கு மேல் வீட்டிற்குள்முடங்கும் மக்கள் காலை 8 மணிக்கு மேலேயே வெளியில் வரும் நிலை உள்ளது. இதனால் தெருக்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தின் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications