ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு சந்திப்பு
சென்னை: ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.

ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அண்மையில் தமிழகம் வந்து ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரிடம் ஆதரவு கோரியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் நேரில் சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி வருகிறார்.
ஜெ., கருணாநிதியுடன் சந்திப்பு
இன்று சென்னை வந்த சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு, ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரி செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.
காங்கிரஸ் கட்சி சுய லாபத்துக்காக ஆந்திராவை துண்டாடுகிறது. அதுவும் ஆந்திர சட்டசபை ஒப்புதல் இல்லாமலேயே ஆந்திராவை துண்டாட நினைக்கிறது காங்கிரஸ் கட்சி. தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் சதி செய்கிறது என்றார்.

பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு கோரினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications