என் மனதில் உள்ளதை சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் கூறினார்.. கமல் ஹேப்பி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றிரவு போனில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மீனவர்களை கட்டிப்பிடித்து கமல் அசத்தல்!-வீடியோ
ராமேஸ்வரம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்றிரவு போனில் தொடர்புகொண்டு வாழ்த்தியதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். தன் மனதில் உள்ளதை சந்திரபாபு நாயுடு கூறியதாகவும் அவர் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் வீட்டில் இருந்து இன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

பின்னர் அங்குள்ள கணேஷ் மகாலில் மீனவர்களை சந்தித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அழைத்து வாழ்த்தினார் என்றார்.
கொள்கையை விட மக்களுக்கு செய்வதை பட்டியலிடுங்கள் என்றும் சந்திரபாபு கூறினார். என் மனதில் உள்ளதை சந்திரபாபு தெரிவித்தார் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications