குற்றவாளி ஜெயலலிதா.. சீறிப் பாய்ந்த கமல் அண்ணன் சாருஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குற்றவாளி பெயரில் தமிழகத்தில் ஆட்சி நடக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் பேஸ்புக்கில் பரபரப்பு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் தனது பேஸ்புக்கில் இன்று கூறியுள்ள கருத்து:

Charu Hasan slam TN governent fo follow foot steps of Jayalalitha

"மாண்புமிகு அமைச்சர் ஜயகுமார் அவர்களுக்கு.... 60 கோடி லஞ்ச ஊழல் குற்றவாளியாக உச்ச நீதி மன்றத்தால் முடிவு செய்யப்பட்ட அம்மா அவர்கள் பெயரால் ஆட்சி செய்கிறீர்கள்...? குற்ற வாளியாக சிறையிலிருக்கும் சசிகலா அவர்கள் சொல்படி ஆட்சி நடத்தவில்லை என்று ஒரு செய்தி வெளியிட்டால் உங்களை ஊழல் அற்றவர் என்று ஒப்புக்கொள்வோம்... கையாடல் குற்றவாளியாக திர்ப்பு முடிவான அம்மா ஆட்சியை நடத்துகிறோம் என்று சொல்லும் நீங்கள் அது இல்லை என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பதிவில், "ஒன்று புரிகிறது அதிமுகவில் ஜயகுமார் ஒருவர்தான் இதுவரை ல்ஞ்சம் வாங்காதவர் போல தெரிகிறது.... ஆனால் உழலுக்கு இன்று துணை போகிறாரே.. ஆட்சியில் இருக்கும் மந்திரி வீட்டில ரெய்டு பிரபல காண்ட்ரக்டர்கள் வீட்டில் கிடைத்த லஞ்ச லிஸ்ட் .. நீங்கள் வணக்கத்துடன் நடத்தும் ஆட்சி லஞ்ச ஊழலுக்கு சிறையிலிருக்கும் சசிகலா சொல்படி நடக்கவில்லை என்றுகூட சொல்ல முடியவில்லை. ?" என்று கூறியுள்ளார் சாருஹாசன்.

கமலை அமைச்சர்கள் அடுத்தடுத்து விமர்சனம் செய்து வரும் நிலையில் இப்போது கமல் அண்ணன் சாருஹாசன் இவ்வாறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
KamalHassan brother S. Charu Hasan slam TN governent fo follow foot steps of Jayalalitha, wh was a convict in asset case.
Please Wait while comments are loading...