வால்பாறையில் பரபரப்பு.. சிறுமியை தூக்கி செல்ல முயன்ற சிறுத்தை.. விரட்டியடித்த பொதுமக்கள்!
சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கி செல்ல முயன்றது.
கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்து 10 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள எஸ்டேட் பகுதி பெரியகல்லாரு. இங்கு நேற்று திடீரென தேயிலை தோட்டத்திலிருந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.

தேயிலை தோட்ட தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து அந்த சிறுத்தை அங்கிருந்த சத்யா என்ற 10 வயது சிறுமியை தாக்கியது. மேலும் சிறுமியை இழுத்து செல்லவும் சிறுத்தை முயன்றுள்ளது.
அப்போது சிறுமியின் அலறல் கேட்டு வந்த அங்கு வந்த சிறுமியின் தாய், பயந்து கூச்சலிட்டார். இதனால் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கட்டை ஒன்றினால் சிறுத்தையை தாக்கினர். அத்துடன் வீட்டினுள் இருந்து விரட்ட கடுமையாக போராடினர். இதனை அடுத்து சிறுத்தை விரட்டியடிக்கப்பட்டது.
பின்னர் கழுத்தில் சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த சிறுமி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இதையடுத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications