சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்ட செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் திறப்பு கணிசமாக குறைப்பு!
சென்னை: சென்னையை வெள்ளத்தில் மிதக்கவிட்ட செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளில் உபரி நீர் வெளியேற்றம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது சென்னைவாசிகளை நிம்மதி அடைய வைத்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பி உபரி தண்ணீர் அனைத்தும் பெருமளவு திறந்து விடப்பட்டதால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இதுவரை கண்டிராத பேரவலத்தை சென்னை சந்தித்தது. தற்போது ஏரிக்கு வரும் நீ வரத்து குறைந்துள்ளதால் ஒவ்வொரு ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 16-ந்தேதியன்று 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 30-ந்தேதி 18 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்து விட்டனர்.

சென்னையில் வெள்ளம்
1-ந்தேதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர் மலை, அனகாபுத்தூர், ராமாபுரம், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், கோட்டூர்புரம், தியாகராய நகர் என சென்னையின் பெரும்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கிப் போகின.

போரூர் ஏரி
அத்துடன் போரூர் ஏரி உபரி நீரும் சேர மவுலிவாக்கம், கொளப்பாக்கம், மணப்பாக்கம் பகுதிகளும் மூழ்கின. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 3,000 கன அடிநீர் திறக்கப்படுகிறது.

பூண்டி
பூண்டி ஏரியில் மிக அதிகளவில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் வடசென்னையை மூழ்கடித்தது. தற்போது ஏரிக்கு வினாடிக்கு 10,500 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைய, வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பும் குறைக்கப்பட்டது.

புழல், சோழவரம்
புழல் ஏரியில் இருந்து 1550 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications