ஒரே சத்தம்.. மாடியில் போன் பேசும்போதே நடந்த சம்பவம்.. துடிதுடித்த இளைஞர்.. செங்கல்பட்டில் பரபரப்பு
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மொட்டை மாடியில் நின்று போன் பேசிக்கொண்டு இருந்தவருக்கு திடீரென உடலில் படுகாயங்கள் ஏற்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அடுத்த பகவத்சிங் நகர் வாவுசி தெருவில் வசித்து வருபவர் ராம்குமார் (27). இவர் அதே பகுதியில் உள்ள அன்பு மெஸ் என்கின்ற உணவகத்தில் பணியாற்றி வருகிறார்

உணவகத்தின் உரிமையாளர் மகேஸ்வரி வீட்டில் இவர் தங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று மொட்டை மாடியில் இருந்து இவர் செல்போன் பேசியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில்தான் போன் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. அவரின் போன் வெடித்து உடலில் கடுமையான காயங்களுடன் மாடியிலேயே சுருண்டு விழுந்து இருக்கிறார். இவர் போன் பேசிய மொட்டை மாடிக்கு அருகிலேயே உயர் மின் அழுத்த கோபுரம் இருந்துள்ளது. மாடிக்கு அருகிலேயே இதன் பில்லர்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
இங்கு இருந்து நீண்ட நேரம் அவர் போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். உயர் மின்னழுத்த கோபுரத்திற்கும் மொட்டை மாடிக்கும் 10 அடி அளவே இருந்துள்ளது. இந்த நிலையில் மின் அழுத்த கோபுரத்திலிருந்து செல்போனுக்கு கதிர்வீச்சு மூலம் ஸ்பார்க் அடித்து தீப்பற்றி உள்ளது. போன் படாரென்று வெடித்து உள்ளது.
போன் வெடித்த அதிர்ச்சியில் காயங்களுடன் இளைஞர் போனை தூக்கி வீசி இருக்கிறார்.இதில் அருகிலிருந்த ஏசியும் வெடித்து சிதறியது. இதில்தான் அந்த இளைஞருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. போன் வெடித்ததில் முகத்தில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அங்கேயே அலறி துடித்துள்ளார். காதின் பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அதோடு ஏசி தீ பற்றியதில் உடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் கை கால் முழுவதும் சேதம் அடைந்த நிலையில் 35% தீக்காயங்களுடன் ராம்குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்தனர்.
ஆம்புலன்ஸ் வரும் வரை அவருக்கு முதலுதவி கொடுத்து அப்பகுதி மக்கள் உதவி உள்ளனர். உடல் முழுக்க காயத்தோடு அந்த இளைஞர் அங்கேயே உருண்டு புரண்டு அழுதுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications