செங்கல்பட்டு உருகிடுச்சு.. கோர்ட் வாசல்லயே கணவனை கட்டிப்பிடித்து.. விழித்த போலீஸ்.. வென்றெடுத்த பாசம்
செங்கல்பட்டு: "கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்" என்று இன்னமும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கோர்ட் வாசலிலேயே ஒரு பாசப்போராட்டம் நடந்துள்ளது.. இதை பார்த்து செங்கல்பட்டே திகைத்துவிட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது சங்கராபுரம்.. இங்கு வசித்து வருபவர் மோகன்.. 32 வயதாகிறது.. இவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். கல்யாணமாகிவிட்டது. மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்..

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் ஹாஸ்டல் ஒன்றில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.. அது ஒரு தனியார் ஹாஸ்டல்.. பெண்கள் + ஆண்கள் என அனைவருமே தங்கக்கூடியது..
லேப்டாப்கள்: அந்த ஹாஸ்டலில், லேப்-டாப்களும், செல்போன்கள் திருடு போயிருக்கிறது.. இது சம்பந்தமாக கேளம்பாக்கம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.. அப்போது, ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு ஜெயிலிலும் அடைத்துள்ளனர்.. இதனிடையே, மோகனுக்கு நேற்று ஜாமீன் கிடைத்திருக்கிறது.. எனவே, அவர் செங்கல்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்..
அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக, அவரது மனைவி, மகனை அழைத்துகொண்டு கோர்ட்டுக்கு வந்திருக்கிறார். அவர்களுடன் அப்போது வக்கீலும் இருந்தார்... ஜெயிலில் இருந்து மோகன் வெளியே வந்ததுமே, அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார்... ஆனால், அதற்குள் மஃப்ட்டியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்துவிட்டனர்..
திருட்டு வழக்கு: இன்னொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்யவும் முயன்றனர்.. அத்துடன் மோகனை, வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து சென்று, வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.. இதையெல்லாம் பார்த்து மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.. தன்னுடைய கணவரை கைது செய்ய கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்..
வக்கீல் எங்கே? பிடிவாரண்டு எங்கே? பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? முதல்ல பிடிவாரண்டை காட்டிவிட்டு, என் கணவனை அழைத்து செல்லுங்கள் என்று கோர்ட் வாசலிலேயே ஆவேசமாக சீறினார்.. ஆனாலும், போலீசார் இதை கண்டுகொள்ளாமல், மோகனை இழுத்து சென்று வாகனத்தில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தனர்.
கெஞ்சினார்: இதனால் பதற்றமும், டென்ஷனும், ஆவேசமும் அடைந்த மோகன் மனைவி, என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறினார்.. பிறகு திடீரென தன்னுடைய கணவர் மோகனை கட்டிப்பிடித்துக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.. ஒருகையில் மகனை பிடித்துக்கொண்டே, போலீசாரிடம் கெஞ்சினார்.. எப்படியாவது, கணவனை காப்பாற்றிவிட வேண்டும், சிறைக்கு மட்டும் அனுப்பிவிடக்கூடாது என்ற தவிப்பு, அந்த பெண்ணிடம் காணப்பட்டது.
வேறு வழி எதுவுமே தெரியாமல், கண்ணீர்விட்டு கதறினார்.. இந்த பாசப்போராட்டத்தினை கோர்ட் வளாகத்தில் நின்றிருந்த அனைவருமே பார்த்து மனம் கலங்கினர்.. அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் திகைத்து நின்றனர்.. பிறகு, கணவர் மோகனை அழைத்துக்கொண்டு, அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர் புகார்கள்: இதைபற்றி போலீசார் சொல்லும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள ஹாஸ்டல்களில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்துள்ளன.. இதுபற்றிதான் மோகனிடம் மறுபடியும் விசாரிக்க முடிவு செய்து வந்தோம்" என்றன.
கணவனை கட்டிப்பிடித்து, கதறியழுது, மனைவி நடத்திய இந்த பாசப்போராட்டம், கோர்ட் வாசலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
திருட்டு வழக்குகள்: மோகன் மீது சென்னையில் கேளம்பாக்கம், ஆதம்பாக்கம், துரைப்பாக்கம், தாழம்பூர், வேளச்சேரி போன்ற போலீஸ் ஸ்டேஷன்களில் நிறைய கேஸ் இருக்கிறதாம்..
200க்கும் அதிகமான மடிக்கணினியை திருடியுள்ளதாகவும், அவைகளை கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் குறைந்த விலைக்கு அவர் விற்பனை செய்திருக்கிறார் என்றும் போலீசார் சொல்கிறார்கள்.. மோகனை மறுபடியும் கைது செய்வதற்காகவே, கேளம்பாக்கம், செங்கல்பட்டு, தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.. மேலும், இதுவரை திருடிய அனைத்து மடிக்கணினியை மீட்கவும் திட்டமிட்டிருந்தார்களாம்.. ஆனால் அதற்குள் ஜெயிலில் இருந்து விடுதலையாகி, வழக்கறிஞர் உதவியுடன் மோகன் தப்பிச்சென்றது செங்கல்பட்டு சிறை வளாகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications