கருங்குழிக்கு ஒன்றிய அரசு விருது ! - அடுத்த மாநில அதிகாரிகளை அசரவைத்த கிராமம்
செங்கல்பட்டு: திமுக ஆட்சி வந்ததும் செய்த முதல் நல்ல காரியம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. அதனால்தான் இன்றைக்கு குக்கிராமம் முதல் பெருநகரமான சென்னை மாநகராட்சி வரை உள்ள பகுதிகள் அனைத்தும் அடிப்படை வசதிகளைப் பெற்று வருகின்றன.
ஒவ்வொரு நகரமும் இன்றைக்குப் போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ந்து வருகின்றன. நகரங்களைப் போலவே குக்கிராமங்கள்கூட பல வசதிகளைப் பெற்றுவருகின்றன.
அதில் முன்மாதிரி கிராமமாக மாறியுள்ளது கருங்குழி பேரூராட்சி. சத்தமே இல்லாமல் பெரிய சாதனையைச் செய்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மையில் ஒன்றிய அரசின் வழங்கிவரும் விருதினை தட்டி வந்துள்ளது கருங்குழி. ஒன்றிய அரசின் வீட்டுவசதி துறையின் கீழாக இயங்கி வருகிறது ஹட்கோ. இதன் சார்பாக இயங்கும் வீட்டு வசதி நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் 2022-03 ஆண்டிற்கான விருதினை கருங்குழிக்கு வழங்கியுள்ளது.
இந்த விருதினை கருங்குழி பேரூராட்சி தலைவர் கோ.தசரதனிடம் ஒன்றிய அமைச்சர் மனோஜ் ஜோஷி வழங்கி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாநில அளவிலான சிறந்த பேரூராட்சிக்கான முதல் பரிசை இந்தக் கருங்குழி தட்டிச் சென்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான பரிசுத் தொகையாக ரூ 10 லட்சத்தை வழங்கி இருந்தார்.
மாநில அரசின் விருதைப் பெற்ற அதே வேகத்தில் இப்போது ஒன்றிய அரசின் விருதினையும் கருங்குழி பெற்றுள்ளது.

கருங்குழி பேரூராட்சி தமிழக அளவில் வாழ்வியல் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருப்பதாகக் கூறி, ஒன்றிய அரசு இந்த விருதினை வழங்கியுள்ளது.
விருது பெற்றதில் மட்டுமல்ல; 100% வரிவசூல் செய்து சாதித்துக் காட்டி இருக்கிறது இந்தப் பேரூராட்சி. 2022-23 ஆம் ஆண்டுக்கான வசூலிக்கத்தக்கச் சொத்து வரி 47.44 லட்சம். தொழில்வரி 43.10 லட்சம். இதைத்தவிர வரியில்லா இனங்கள் 7.60 லட்சம். இந்த வரியில்லா இனங்கள் உள்ளாகத்தான் குடிநீர் வரி, கடை வாடகை வசூல் போன்றவை வருகின்றன.

ஆக, மொத்தமாக 1கோடி ரூபாய்க்கு மேலாக இந்தச் சின்ன கிராமம் வரிவசூல் செய்துள்ளது. இதனால் வரிவசூலில் இந்தப் பேரூராட்சி 100% தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரூராட்சி கசடு கழிவுநீர் மேலாண்மையில் சிறந்து விளக்குகிறது. ஆந்திர மாநில அதிகாரிகளே இங்கே வந்து ஆய்வு நடத்தி, அந்த அனுபவத்தினைக் கொண்டு அவர்களது மாநிலத்தில் திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளனர் என்றால் சும்மா? அந்தளவுக்கு மாநிலம் தாண்டிய புகழை ஈட்டி இருக்கிறது கருங்குழி.
வீடுகளில் சேகரமாகும் செப்டிக் டேங்' கழிவுநீரை, டேங்கர் லாரிகளை வைத்து வெளியேற்றுவர். அப்படி வெளியேற்றப்படும் நீரானது கசடு கழிவுநீர் மேலாண்மை நிலையத்திற்குக் கொண்டுசென்று அங்கே கசடு தனியாகப் பிரிக்கப்பட்டு, கழிவுநீர் வடிகட்டப்பட்டு, உலர் படுகை மூலம் பிரிக்கப்படுகிறது.

ஆகவே கழிவுநீரைக்கூட இக்கிராமம் முறையாகக் கையாளுகின்றது. அச்செய்தியை தமிழ்நாட்டு மக்கள் முழுமையாக அறிந்துள்ளனரா என்று தெரியவில்லை. ஆந்திர அதிகாரிகள் மிச் சரியாக அறிந்துள்ளனர். எனவேதான் அவர்கள் கருங்குழிக்கு வந்து ஆய்வு நடத்தி, அனுபவம் பெற்றுச் சென்றுள்ளனர்.
மேலும் கருங்குழி பேரூராட்சி, உரத் தயாரிப்பு, புழு வளர்ப்பு என மண்ணை வளமாக்கும் பல காரியங்களில் மிகத் தீவிரமாக இறங்கிச் செய்துவருகிறது.
இது எப்படிச் சாத்தியமானது?

திடக்கழிவு மேலாண்மையில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை இந்தப் பேரூராட்சி வெறும் ஊழியர்களாகப் பார்க்கவில்லை. அதில் எந்த ஊழியர் சிறப்பாக செயல்படுகின்றாரோ அவரை அதிகாரிகள் தனியே அடையாளம் காண்கிறார்கள். அப்படிச் சிறந்து விளங்கும் ஒரு ஊழியருக்கு அதிகாரிகள் ஒரு ஸ்டார் மதிப்பை வழங்குகிறார்கள். அவர் ஸ்டார் பணியாளராக அழைக்கப்படுகிறார்.
இந்த ஸ்டார் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. அதிக விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவது, வழங்கப்பட்டுள்ள கையுறைகள், சீருடைகள், முகக்கவசம் போன்றவற்றைத் தவறாமல் பயன்படுத்துவது, ஒரு வீடு விடாமல் கழிவுகளைச் சேகரிப்பது, அதைச் சரியாக தரம் பிரிப்பது எனப் பலவற்றையும் முறையாகச் செய்தாக வேண்டும். அவருக்குத்தான் இறுதியாக இந்த ஸ்டார் அங்கீகாரம் கிடைக்கும்.

பணியாளர்களைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்வதைப்போலவே ஏரி, குளம், கம்மாய் என விரவிக்கிடக்கும் நீர்நிலைகளையும் இந்தப் பேரூராட்சி சரியாகப் பாதுகாத்து வருகின்றது.
ஆதிவாசி நகரில் கடந்த 40 ஆண்டுகளாக ஒரு குளம் தூர் வாரப்படாமல் இருந்தது. அதை ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் சமீபத்தில் தூர்வாரி உள்ளனர். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்தக் குளம் இந்தத் திமுக ஆட்சிக்காலத்தில்தான் சீரமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தில் ஏறக்குறைய 21 பழமையான குளங்கள் இருந்தன. அனைத்தும் இப்போது சீரமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதியதாக 4 குளங்களையும் உருவாக்கியுள்ளனர். ஆக மொத்தமாக 25 குளங்களை மறு சீரமைப்பு செய்ததால், தற்போது நீராதாரமும், நிலத்தடி நீரும் பெருகியுள்ளது என்கிறார்கள் அந்த ஊர் மக்கள்.
-
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications