Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வரே உத்தரவிட்டும் நரிக்குறவர் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லையா? உண்மை என்ன? கலெக்டர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், அஸ்வினி சேகர் என்ற நரிகுறவர் பெண்ணுக்கு முதலமைச்சர் வழங்கிய கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

Recommended Video

    Bathroom வசதி கூட இல்ல.. வைரலான Narikuravar Ashwini பகுதி மக்கள் | Oneindia Tamil

    அஸ்வினி சேகர் என்ற அந்த நரிகுறவர் பெண்ணே இது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.

    அது தொடர்பான விவரம் வருமாறு;

     செங்கல்பட்டு ஆட்சியர்

    செங்கல்பட்டு ஆட்சியர்

    1. இதுவரையில் 54 இலவச வீட்டு மனை பட்டாக்கள் 35 ஜாதி சான்றிதழ்கள் ஆறு முதியோர் உதவித்தொகை வாக்காளர் அடையாள அட்டைகள் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன,

    2. வங்கிகள் மூலம் கடனுதவி தேவைப்பட்ட 12 நபர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதமும் திருமதி அஸ்வினி சேகர் அவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வங்கி கடன் ஆணைகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் திருமதி அஸ்வினி சேகர் என்பவர் ரூபாய் 5 லட்சம் கடன் உதவி கோரியதன் பேரில் கடன் வழங்க அதன்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தயார் நிலையில் இருந்தும், தன்னுடைய ரூ.5 லட்சத்திற்கான கடன் வழங்கும் ஆணையையும் சேர்த்து அனைத்து நபர்களுக்கும் ஒன்றாக வழங்கும் பட்சத்தில் தான் பெற்றுக் கொள்வதாக தெரிவித்து வங்கி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட இதர நபர்களுக்கும் ஆணைகள் வழங்கப்படுவது நிலுவையில் உள்ளன.

    அஸ்வினி சேகர்

    அஸ்வினி சேகர்

    3. அஸ்வினி சேகர் என்பவர் மாமல்லபுரம் பேரூராட்சி பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்திட இட ஒதுக்கீடு கோரியதன் பேரில் ஜூலை மாதத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் மூலம் தகுந்த கடைகள் வழங்க உத்தரவிட்டதன் பேரில் கடற்கரை பகுதி ஐந்து ரதம் பகுதி ஒத்தவடத் தெரு போன்ற இடங்களில் கடை வழங்க ஏதுவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அஸ்வினி சேகர் என்பவர் கூறியவாறு கடை இருப்பிடம் அமையவில்லை. அவர் குறிப்பிட்டு கேட்கும் கடையானது ஏற்கனவே ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் என்னை சந்தித்து கோரியதன் அடிப்படையில் மாமல்லபுரம் புது நகர் வளர்ச்சி குழுமம் மூலம் உடனடியாக கடை ஒதுக்க ஆணையிடப்பட்டு 18.08.2022 காலை கடை எண் 66 ஒதுக்கீடு செய்ய இருந்த நிலையில் அதனையும் அவர் நிராகரித்து விட்டார்.

    பிரதம மந்திரி திட்டம்

    பிரதம மந்திரி திட்டம்

    4. மேலும் புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிடம் கட்டிக் கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    உண்மை நிலவரம்

    உண்மை நிலவரம்

    5. செங்கல்பட்டு மாவட்ட பூஞ்சேரி கிராமத்தின் இருளர் மற்றும் நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.1.5 கோடி மதிப்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் அவர்களுக்கு வழங்க தயாராக உள்ள நலத்திட்ட உதவிகளை செயல்படுத்துவதற்கு அப்பகுதி மக்களின் ஒப்புழைப்பை பெற செங்கல்பட்டு சார் ஆட்சியர் நேரிடையாக சென்று விவரங்களை எடுத்து கூறி உதவிகளை வழங்குதற்கு மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது, என மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+