சென்னை கறிக்கடை சாக்கடையில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு... கடைக்கு சீல்!
சென்னை : சென்னை வேளச்சேரியில் கறிக்கடை சாக்கடையில் 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அச்சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டான்.
சென்னை வேளச்சேரியில் கறிக்கடை ஒன்றிற்கு அருகே இருந்த கழிவு நீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்தான். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிறுவனை மீட்க தீவிரமாகப் போராடினர்.

சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தின் முடிவில், 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டான். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டான்.
போலீசாரின் விசாரணையில், அச்சிறுவன் தண்டீஸ்வரத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. தனது தந்தையுடன் இறைச்சி வாங்க அந்தச் சிறுவன், கறிக்கடை அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளான் எனத் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தச் சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இறைச்சிக் கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த கடை, விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். விதிமுறைகளைப் பின்பற்றாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடந்தாண்டு பெங்களூருவில் மழை நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட தமிழக சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications