30வது முறையாக உடைந்து நொறுங்கிய சென்னை விமான நிலைய கண்ணாடி.. தொடரும்!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 9 முறை மேற்கூரை இடிந்து விழுந்தது.

உடைந்து விழும் கண்ணாடிகள்:
மேலும், 8 முறை கண்ணாடி கதவுகளும், தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துவிட்டன.

உயிர்சேதம் எதுவும் இல்லை:
மொத்தமாக, 29 முறை அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.இந்த சம்பவம் நிகழ்ந்த போது பயணிகளோ, ஊழியர்களோ இல்லாததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.

மீண்டும் உடைந்த கண்ணாடி:
இந்த நிலையில் விமான நிலையத்தில் உள்நாட்டு வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் அவசர கால நுழைவு வாயிலின் கண்ணாடி கதவின் ஒரு பகுதி நேற்று காலை 10 மணி அளவில் உடைந்து விழுந்தது.

போலீஸ்காரர் படுகாயம்:
7 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீஸ்காரர் அன்வர்பாஷா என்பவர் படுகாயம் அடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை:
உடனே அவரை விமான நிலைய ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும் மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த கண்ணாடி பகுதிகளை அகற்றினார்கள். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் விபத்துகள்:
விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக நடைபெற்ற அசம்பாவித சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் அடிக்கடி விழும் சம்பவங்கள் தொடர்வதாக பயணிகள் தெரிவித்தனர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications