குடிநீர்க் குழாய் வெடிப்பு.. 2 மணி நேரம் ஸ்தம்பித்த சென்னை ஏர்போர்ட் சாலை– மக்கள் அவதி
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையமருகே அமைந்துள்ள சாலையில் இன்று காலை இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
நேற்று, காலையில், திடீரென்று பெய்த கோடை மழையால் சாலைகளில் அங்கங்கே அமைந்துள்ள குண்டு, குழிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. அதனாலும், மெட்ரோ ரயில் வேலை நடைபெறுவதாலும் குரோம்பேட்டை, பல்லாவரம், மீனம்பாக்கம் சாலையில் கடும் வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை வேளையில் 2 மணி நேரமாக கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. விமான நிலையமருகே அமைந்துள்ள குடிநீர்க் குழாய் ஒன்று உடைந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதியுற்றனர்.
கிட்டதட்ட 2 மணி நேரம் கழித்தே சிறிது, சிறிதாக வாகனங்கள் நகரத் தொடங்கின. காலையில் பணியிடத்திற்கு செல்லும் பொதுமக்கள் இந்த திடீர் வாகன ஸ்தம்பிப்பால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
-
ஏர்போர்ட் கட்டத்தானே நிலம் கொடுத்தோம்.. என்ன கொடுமை இது.. விஜய்க்கு எதிராக திரளும் பரந்தூர் மக்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications