விடாமல் தொடரும் சாரல்.. ஊட்டியை விட குளிர்ந்து நடுங்கும் சென்னை!
சென்னையின் பெரும்பாலான பகுதிகள் சாரலும் தூறலுமாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
சென்னை: சென்னையின் பெரும்பாலான பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. பல பகுதிகள் மழை, சாரல், லேசான தூறல் மற்றும் கடும் குளிருடன் ஊட்டி போன்றுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலையில் இருந்து நேற்று காலை வரை கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஓரளவுக்கு ஓய்ந்துள்ளது
ஆனால் சென்னையை பொருத்தவரை பெரும்பாலான இடங்களில் மழை கட்டுக்குள் தான் உள்ளது. இரவு முழுவதும் பெய்த மழை விடிந்த பிறகு ஓரளவுக்கு ஓய்ந்தது. பின்னர் மீண்டும் தொடங்கிய மழை சாரல் மழையாக நீடிக்கிறது.

பகலில் சுள்ளென வெயில்
நேற்று பகல் நேரத்தில் சுள்ளென வெயில் காய்ந்தது. இதனால் சென்னைக்கு மழை அவ்வளவுதானோ என்று தோன்றியது. ஆனால் அதற்கு நேர்மாறாக இன்று முழுவதும் சாரலுடனே தொடர்கிறது.

வெயிலும் மழையும்
சென்னை மாநகர் புறநகர் பகுதிகளில் முழுவதும் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் சாரல் மழையும் பெய்து வருகிறது.

குளிரில் மாநகர்
திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தி நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கொரட்டூர், ராமாபுரம், வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நகர் முழுவதும் குளிர் நிலவி வருகிறது.

புறநகரில் குளிர் காற்று
சென்னையில் புறநகர் பகுதியான மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், சேலையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர் காற்று வீசி வருகிறது. விட்டு விட்டு லேசான மழையும் பெய்து வருகிறது.

ஊட்டியை போன்று உள்ளது
அவ்வப்போது தூறல், மிதமான மழை, குளிர்ந்த காற்று, குளிர் என சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் ஊட்டியை போன்று உள்ளது. குளிரால் ஃபேன் கூட போட முடியாத நிலை உள்ளது. பிற்பகலை தாண்டியுள்ள நிலையிலும் சென்னை முழுவதும் அரை இருட்டுடனே உள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications