அத்தைன்னு கூட யோசிக்கலயே.. பரிதாப கிருஷ்ணவேணி.. யாரிந்த ஐ.டி. இளைஞர்? செங்கல்பட்டு கோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: ரூ.50 ஆயிரம் கடன் தொடர்பாக ஒரு கொலை நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2016-ல் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவங்களில் செங்கல்பட்டு கிருஷ்ணவேணி கொலையும் மிக முக்கியமானதாகும்.. யாரிந்த கிருஷ்ணவேணி?

Chengalpattu chennai

கிருஷ்ணவேணி: சென்னை குரோம்பேட்டை, பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் ஐ.டி. நிறுவன ஊழியர் ஆவார்.. இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி, 35. இவர்களுக்கு கமலகார்த்திக் (12) என்ற மகனும், அனுஷ்கா (6) என்ற மகளும் இருக்கிறார்கள்..

வழக்கமாக பள்ளிக்கு செல்லும் தன்னுடைய குழந்தைகளை கிருஷ்ணவேணிதான் மாலையில் அழைத்து வருவாராம். ஆனால், 14.6.2016 அன்றைய தினம் குழந்தைகளை அழைத்து செல்ல யாரும் வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் ஜெயமுருகனுக்கு தகவல் சொல்லியிருக்கிறது.

டிவி சத்தம்: இதற்கு பிறகு ஜெயமுருகன் தன்னுடைய வீட்டுக்கு போன் செய்து பார்த்துள்ளார். அப்போதும் யாரும் எடுக்காததால் உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்க்குமாறு சொல்லி உள்ளார். உறவினர் வீட்டிற்கு சென்றால், சத்தமாக டிவி ஓடிகொண்டிருந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோதுதான் கிருஷ்ணவேணி சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் எந்த பொருட்களும் கொள்ளை போகவில்லை என்பது உறுதியானது. இறுதியில் அருண்குமார் என்பவர் பெயர் அடிபட்டது.

ஜெயமுருகன்: ஜெயமுருகனின் உடன்பிறந்த சகோதரியின் மகன்தான் அருண்குமார்.. சென்னை எழும்பூரில் வசித்து வருகிறார். அருண்குமாருக்கு 25 வயதாகிறது. இவரும் ஐடி நிறுவன ஊழியர் ஆவார்.
தன்னுடைய தாய்மாமாவான ஜெயமுருகன் வீட்டுக்கு அடிக்கடி வந்து போயிருக்கிறார் அருண்குமார்.. தன்னுடைய கணவரின் சகோதரியுடைய மகன் என்பதால் அருண்குமாரிடம் சகஜமாக பழகியுள்ளார் கிருஷ்ணவேணி. ஆனால், இதை தவறாக எண்ணிய அருண்குமார் கிருஷ்ணவேணியை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை உல்லாசத்திற்கு அழைத்ததாக தெரிகிறது.

என்ன காரணம்: அதற்கு கிருஷ்ணவேணி உடன்படவில்லை. இதனால், இந்த விஷயத்தை வெளியே கிருஷ்ணவேணி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக அவரை சம்பவத்தன்று கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு பிறகு, சிட்லப்பாக்கம் போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணையை துவங்கினார்கள். அப்போது அருண்குமார் தன்னுடைய வாக்குமூலத்தில் வேறு காரணத்தை கூறியிருந்தார்.

ஜெயமுருகன்: அதாவது அருண்குமாரின் அப்பா தருமலிங்கம், ஜெயமுருகனிடம் ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம்.. அந்த பணத்தை திருப்பிக் கேட்டு கிருஷ்ணவேணி, தரக்குறைவாக திட்டியிருக்கிறார். சம்பவத்தன்று இதைக் கேட்டு கிருஷ்ணவேணியிடம் அருண்குமார் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றியதால், கத்தியால், கிருஷ்ணவேணியை குத்திக் கொலை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார் அருண்குமார்.

இதற்கு பிறகு அருண்குமாரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி எழிலரசி தற்போது தீர்ப்பு அளித்துள்ளார். இந்த வழக்கில் அருண்குமார் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து அருண்குமாரை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

அபராதம்: மேலும் 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.. இந்த அபராதத்தை கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+