தீயை அணைப்பதில் தாமதம் ஏன்? சென்னை மாவட்ட கலெக்டர் விளக்கம்
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: தி.நகர் சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தாமதம் ஏற்படுவது ஏன் என்பது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பாக இருக்கும் தி. நகரில் பகுதியில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் அதிகாலை 4.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 15 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வரும் நிலையில் இன்று மாலை அக்கட்டடத்தின் 2, 3, மற்றும் 4 தளத்தில் மீண்டும் தீ பற்றி எரிகிறது.

இந்த தீ விபத்தால் 7 மாடி கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளதால் அந்தப் பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். சுமார் 15 மணி நேரமாக தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் உஸ்மான் சாலை பக்கம் பொதுமக்கள் வரவேண்டாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப்பகுதியில் போக்குவர்துத நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், கட்டடத்தின் அமைப்பு காரணமாகவே தீயணைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். தீயணைக்கும் பணியில் 125 வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 10 நிமிடத்துக்கு ஒரு லாரி தண்ணீர் என்ற வகையில், 50 லாரிகளில் தீயணைக்கும் பணிக்காக தண்ணீர் எடுத்து வரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீ விபத்தால் தி.நகர் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சி அளிக்கிறது என்றார். பற்றி எரியும் தீ இன்று இரவிற்குள் கட்டுக்குள் வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அந்தப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications