சென்னையில் நடு ரோட்டில் வெட்டப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி மரணம்
சென்னை: சென்னையில் நடு ரோட்டில் வைத்து ஒரு கும்பலால் வெட்டப்பட்ட டாக்டர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார்.
துரைப்பாக்கத்தில் வசித்து வந்தவர் டாக்டர் சுப்பையா. இவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக இருந்தவர். சில மாதங்களுக்கு முன்புதான் பணி ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர் அபிராமபுரத்தில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். கடந்த 14ம் தேதி மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டபோது வீட்டுக்கு அருகே வைத்து ஒரு கும்பலால் சரமாரியாக தாக்கப்பட்டார் டாக்டர் சுப்பையா.
அரிவாள்களால் வெட்டப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் டாக்டர் சுப்பையா மரணமடைந்தார்.
நிலத்தகராறில் இந்தக் கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்புதான் டாக்டரின் சொந்த ஊராகும். அங்கு அழருக்கு நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்ற ஆசிரியருக்கும், டாக்டர் சுப்பையாவுக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இருப்பினும் டாக்டருக்கு ஆதரவாக கோர்ட் தீர்ப்பு வந்தது. இருப்பினும் நிலப் பிரச்சினை ஓயவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில்தான் டாக்டர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டாக்டர் சுப்பையாவின் மைத்துனர் மோகன் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் வக்கீல் பைசில், இவர்களின் உறவினரான வக்கீல் வில்லியம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் டாக்டர் மீது தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள பைசில் மற்றும் வில்லியமை கைது செய்ய போலீஸார் போனபோது அங்கு வக்கீல்கள், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணனைத் தாக்கினர். மேலும் வக்கீல்களைக் கடத்த முயன்றதாகவும் சங்கரநாராயணன் மீது புகார் கொடுத்தனர். அதன் பேரில் அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்தப் பின்னணியில்தான் தற்போது டாக்டர் உயிரிழந்துள்ளார்.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications