ஈசிஆர் சாலை பயங்கரம்.. அய்யோ போச்சே.. அமைச்சர் மெய்யநாதன் கார் மோதி புதுமாப்பிள்ளை துடிதுடிக்க பலி!
செங்கல்பட்டு: சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனின் கார் மோதி புது மாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
அமைச்சர் மெய்யநாதனை மயிலாடுதுறையிலிருந்து சென்னை அழைத்து வருவதற்காக கார் சென்ற போது இந்த துயர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கடலூரை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர் தனது மனைவியுடன் சென்னை புதுவண்ணாரப் பேட்டையில் உள்ள மாமியார் வீட்டிற்கு டூ விலரில் சென்று கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலை மாமல்லபுரம் அருகே அமைச்சர் மெய்யநாதனின் காரில் சிக்கி தூக்கி வீசப்பட்ட புதுமாப்பிள்ளை ஜான்சன், நிகழ்விடத்திலேயே மனைவி முன்பு உயிரிழந்துள்ளார்.
இதனிடையே இந்த விபத்து நிகழ்ந்த போது காரில் அமைச்சர் மெய்யநாதன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் பயணித்திருந்தால் எஸ்கார்ட் வாகனம் பாதையை கிளியர் செய்து கொடுத்திருக்கும்.
அமைச்சரின் காரில் ஓட்டுநர் மட்டும் பயணித்த போது விபத்து நிகழ்ந்ததால் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அண்மையில் தான் அமைச்சர் பொன்முடியின் கார் மோதி டூவிலரில் சென்ற நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்குள் அடுத்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அமைச்சர்களுக்கு தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் ஒரே நாளில் இருப்பதால் அவர்கள் வேகமாக பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications
