வெள்ள நிவாரணம்: முதல்வர் நிவாரண நிதிக்கு ஜெயலலிதாவிடம் ரூ. 22 கோடி நிதி அளிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க விரும்பும் மக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். டி.வி.எஸ் மோட்டார்ஸ் நிறுவனம், மாதாஅமிர்தானந்தாமயி மட நிர்வாகத்தினர் என ஒரே நாளில் 22 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவிடம் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறு வாழ்வுப் பணிகளை மேற் கொள்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதியுதவி அளித்துள்ளனர். இன்று ஒரே நாளில் 22 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

- டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் 5 கோடி ரூபாய்.
- சத்குரு ஸ்ரீ மாதா அம்ரிதாநந்தமயி தேவியின் சார்பில், மாதா அம்ரிதானந்தமயி மடத்தின் அறங்காவலர் சுவாமி ராமகிருஷ்ணாநந்தா புரி 5 கோடி ரூபாய்.
- டி.ஏ.எப்.இ. லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் மல்லிகா ஸ்ரீனிவாசன் 3 கோடி ரூபாய்.
- ஜாய் ஆலுகாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜாய் ஆலுகாஸ் 3 கோடி ரூபாய்.
- இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சீனிவாசன் 2 கோடி ரூபாய்.
- ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஓய்.கே.கூ 2 கோடி ரூபாய்.
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதன்மை பொது மேலாளர் ரமேஷ் பாபு 1 கோடி ரூபாய்.
- சிட்டி யூனியன் பாங்க் லிமிடெட் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் டாக்டர் காமகோடி 1 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications