அவனவன் செத்து கிடக்கிறான்.. அங்கே போய், ஜெ. பேனர் கட்டுறான்: டிராபிக் ராமசாமி ஆவேசம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, வெள்ளம் பாதித்த தனது சட்டசபை தொகுதியான ஆர்.கே.நகருக்கு நேரில் பார்வையிட செல்லாவிட்டால், அவரது வீட்டுக்கு முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து ராமசாமி பேசிய வீடியோ, சமூக தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் ராமசாமி கூறியுள்ளதாவது:
கோட்டையில் உட்கார்ந்து கதை பேசிவிட்டு அதிகாரிகளிடம் அறிக்கை வாங்கும் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தேவையில்லை. தன்னை தேர்ந்தெடுத்த ஆர்.கே.நகர் தொகுதி மக்களையே மதிக்கவில்லை முதல்வர்.

மக்கள் பணம்தான்
மக்கள் இறந்த பிறகு, அவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்துக்கொண்டுள்ளார். அது யார் வீட்டு பணம். அதுவும் மக்களின் வரிப்பணம்.

அக்கறை வேண்டும்
புறப்பட்டுவிட்டான் இந்த இளைஞன் ராமசாமி, போயஸ்கார்டனுக்கு. முதல்வருக்கு, அக்கறையிருந்தால் முதலில் தனது சொந்த தொகுதிக்கு போகட்டும்.

பிடில் வாசிப்பு
ஊர் நெருப்பில் எரியும்போது பிடில் வாசித்தான் ஒரு மடையன் என்று சொல்வார்களே, அதுபோலதான் இப்போது தமிழக நிர்வாகம் இருக்கிறது. இந்த முதல்வர் நமக்கு தேவையா?

பிணத்துக்கு பக்கத்தில் பேனர்
அவனவன் செத்து கிடக்கிறான். அங்கே போய், முதல்வர் படம்போட்டு பேனர் கட்டுறான். உங்களுக்கெல்லாம், சூடு சுரணை கிடையாதா? முதல்வர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு போகவில்லை எனில், போயஸ் கார்டன் வாசலில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.

காஞ்சியில் தடுப்பு
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நிவாரண பொருட்களை அதிமுக ரவுடிகள், ஜெயலலிதா படத்தை ஒட்டினால்தான், சென்னைக்கு வண்டிபோகும் என 50 வண்டிகளை காஞ்சிபுரம் டோல்கேட்டில் மடக்கி வைத்துள்ளார்களாம். பெங்களூரில் இரந்து ஒரு பெண் எனக்கு தகவல் கொடுத்தார். வேதனையாக இருக்கிறது. ரவுடிகளுக்கு ஜெயலலிதா ஊக்கம் கொடுக்கிறார். அதிமுகவினரை அடக்கி வைக்காவிட்டால், நானே காஞ்சிபுரம் டோல்கேட் செலவேன். உங்கள் உறுப்பிரை அடக்காவிட்டால் மக்கள் உங்களை அடக்கிவிடுவார்கள்.
செருப்படி...
Posted by Troll Jaya on Sunday, December 6, 2015
போயஸ்கார்டன்
மக்கள் படும் துன்பங்களை வேடிக்கை பார்க்க உங்களுக்கு வெட்கமில்லையா. அக்கிரமத்திற்கும் எல்லையில்லையா. என்னை கைது செய்தாலும் பரவாயில்லை. அதிகாரிகள் திருந்த வேண்டும். அதுவரை விடமாட்டேன். போயஸ்கார்டன் வீட்டு முன்பே படுத்து தூங்குவேன். இவ்வாறு ஆக்ரோஷமாக கூறுகிறார் டிராபிக் ராமசாமி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications