சென்னையில் புதிய மருத்துவக் கல்லூரி: 2015-2016ல் மாணவர் சேர்க்கை
சென்னை: சென்னையில் மேலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 2015-2016ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் 1 இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி உள்ளது.
மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல் மருத்துவர்களின் எண்ணிக்கை இல்லை. இதனாலும் சுகாராத வசதியை பொருத்த வரை தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கவும் முதல்வர் ஜெயலலிதா பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
வெளிமாநிலத்தவர்களும், வெளிநாட்டவர்களும் தமிழகத்திற்கு சிகிச்சை பெற வருவதால் மாநிலத்தில் மருத்துவ சுற்றுலா அதிகரித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை துவங்கி வருகிறது.
கடந்த ஆண்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு ஒரே ஆண்டில் இந்திய மருத்துவ கவுனிசிலின் அனுமதியோடு மாணவர்கள் சேர்க்கை நடத்தியது தமிழக அரசு. சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள ஏ.பிளாக்கில் ரூ.143.14 கோடி செலவில் மருத்துவமனையும், பி பிளாக்கில் ரூ.200 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வாலாஜா சாலையில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முடிந்த உடன்
இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி பெற்று 2015-2106ம் ஆண்டில் முதல்கட்டமாக 100 மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி என ஏற்கனவே 3 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications