ரத்தம் படிந்த பெண்கள் உள்ளாடை, ரத்தக்கறையுடன் கால்தடம்.. காட்டேரி பீதியில் சென்னை மக்கள்
சென்னை: பெண்களின் உள்ளாடைகள் ரத்தக்கரையோடு கிடந்ததாலும், 13 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்ததாலும் ரத்தகாட்டேரி நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர், சென்னை, எழில் நகர் பகுதி மக்கள்.
சென்னை துரைப்பாக்கம் எழில்நகர் பகுதியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 8,027 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. 703 குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

ரத்தக்காட்டேரி பீதி
மீதம் உள்ள வீடுகள் காலியாக உள்ளன. இவற்றில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இங்கு, இரவில் பேய்கள், ரத்தக்காட்டேரி உலாவுவதாக பீதி நிலவுகிறது.

சிறுமி ரத்தத்தை குடித்ததா காட்டேரி?
நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக நடந்து சென்ற 13வயது சிறுமி ரத்தக்காட்டேரி அடித்து ரத்தம் குடித்ததாகவும் மயங்கி கிடந்த அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

உள்ளாடைகளில் ரத்தம்
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு பெண்கள் உள்ளாடைகள் ரத்தக்கரையோடு கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர். ரத்தக்கறை படிந்த கால்தடங்களும் காணப்பட்டன. ஆனால் 13 வயது சிறுமி குறித்து துப்பு கிடைக்கவில்லை.

மக்கள் நடமாட்டம் இல்லை
அப்பகுதியில் யாருக்கும் காலில் அடிபட்டு இருக்கலாம் அவர்கள் துணியை எடுத்து ரத்ததத்தை துடைத்து போட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். ஆயினும் ரத்தக்காட்டேரி பயத்தால் இரவில் அங்கு நடமாடவே மக்கள் அஞ்சுகின்றனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications