நீட் அச்சம்.. 10 வருடங்களாக பாடத்திட்டத்தை மாற்றாதது ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: கற்பிக்கும் முறையையும், பாடத்திட்டத்தையும் மாற்றி அமைக்காதது ஏன் என்று தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தரவரிசை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார். ஆனால் நீட் தேர்வில் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை.
எனவே தற்போது நடைபெறும் கலந்தாய்வில் தன்னை இணைத்துக் கொள்ள உத்தரவிடக் கோரி ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார். இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் பட்டியலை மதியம் 2.30 மணிக்குள் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டார்.
அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்காதது ஏன்? கற்பிக்கும் முறையையும் மாற்றி அமைக்காதது ஏன்?
சிபிஎஸ்இ அமைப்பை தேர்வு நடத்தும் நிறுவனமாகவும், வினாத்தாள் தயாரிக்கும் உரிமையும் வழங்கியது யார். அவர்கள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு சாதகமாகத்தானே நடந்து கொள்வர். சிபிஎஸ்இ தரத்திலான கேள்விகளை எப்படி மாநில பாடப்பிரிவு மாணவர்களால் எதிர்கொள்ள முடியும்.
மாணவர்கள், பெற்றோர் பாதிப்பிற்கு முழு காரணம் மாநில பாடத்திட்டமே. 10 வருடங்களாக பாடத்திட்டத்தை தமிழக அரசு மாற்றவில்லை என்றார் அவர். இறுதியாக நீட் விவகாரத்தில் தன்னால் இயன்ற முயற்சிகளை செய்த தமிழக அரசுக்கும், குரல் கொடுத்த அனைத்து கட்சிகளுக்கும் பாராட்டுகளை நீதிபதி தெரிவித்தார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications