பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்த விவகாரம்..குஷ்பு வழக்கில் ஹைகோர்ட் நோட்டீஸ்
பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி, குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு ஒருவாரத்தில் பதிலளிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை குஷ்புவிற்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் கடந்த 2012ல் புதுப்பித்து பாஸ்போர்ட் வழங்கியது. 2022 வரை இது செல்லுபடியாகும். அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டதால் அவரது பாஸ்போர்ட் தாள்கள் நிரம்பி விட்டன. இதையடுத்து பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி சென்னை மண்டல அலுவலகத்தில் குஷ்பு விண்ணப்பித்தார்.

ஆனால், கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். இதை எதிர்த்து நடிகை குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்தமனுவில், என்னிடம் பாஸ்போர்ட் புத்தகத்தில் உள்ள பக்கங்கள் பயன்படுத்தப்பட்டு முடிந்து விட்டது. கூடுதல் பக்கங்களை இணைக்க கோரி, தென்மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கையை பாஸ்போர்ட் அதிகாரி மறுத்து விட்டார்.
என் மீது கிரிமினல் வழக்கு உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாது என்று கடந்த மாதம் 28ம் தேதி பாஸ்போர்ட் அதிகாரி உத்தரவு பிறப்பித்தார். இது சட்ட விரோதமானது. இதை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் பிரசாரத்தின் போது, என் மீது பொய்யாக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்குகளில் நான், முன்ஜாமீன் பெற்றேன்.
அப்படி இருந்தும், பாஸ்போர்ட் அதிகாரி, எனது கோரிக்கையை ஏற்க மறுத்தது தவறானது. எனவே, பாஸ்போர்ட்டை புதுப்பிக்க உத்தரவிட வேண்டும். வருகிற 12ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளேன். எனவே, எனது பாஸ்போர்ட்டை அதற்குள் புதுப்பிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications