Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியார் பாலில் கலப்படமா? : 2 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு ஹைகோர்ட்டில் உத்தரவு!

தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பு விவகாரத்தில் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த 2 வாரத்தில் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை : தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் எழுந்த நடவடிக்கைகைள் குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் பாலில் 100 சதவீதம் ரசாயன கலப்படம் செய்வதாக தமிழக அரசே ஒப்பு கொண்டது. இதனை அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க மத்திய அரசின் சோதனைக் கூடங்களுக்கு பால் பாக்கெட் சேம்பில்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆய்வின் முடிவு படி தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கூறியுள்ளது.

Chennai HC orderes Tn government to reply within 2 weeks about milk adulteration

இந்நிலையில் தனியார் பாலில் ரசாயனம் கலப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் கடந்த வாரம் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் பாலில் கலப்படம் என்று அரசே கூறுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கலப்படம் செய்வதாகக் கூறும் அரசு, நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது ஏன் என்றும் மனுதாரர் கேள்வி எழுப்பியிருந்தார்..

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை என்றும் மனுதாரர் கோரி இருந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் நிறுவனங்களின் பாலில் ரசாயன கலப்பு இருப்பதை அறிந்து அதனை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 2 வாரத்திற்குள் இது குறித்த விரிவான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பால் கலப்பட விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்ய செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+