மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக் கூடாது... தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் 'கறார்' உத்தரவு
நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் திறக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் திறக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளால் விபத்துகள் அதிகரிப்பதாலும், சமூக பாதிப்புகள் ஏற்படுவதாலும் அந்தக் கடைகளை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவினால் தமிழக அரசுக்கு வருவாய் பாதிப்பு ஏற்படும் என்பதால் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியது.

எனினும் வருவாய்க்காக உயிர்களை பலியிடுவதா என்று கேட்ட நீதிபதிகள் வருவாயை பெருக்க மாற்று வழியை தேடிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் தமிழக நெடுஞ்சாலையில் உள்ள 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடின.
இதனால் ஊருக்குள் கடையை திறக்க இடம் தேடியபோது பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளை நகராட்சிகள் எடுத்துக் கொண்டு அதற்கான தீர்மானத்தை 25-ஆம் தேதிக்குள் நிறைவேற்ற உள்ளாட்சி சிறப்பு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மூடப்பட்ட நெடுஞ்சாலைகளை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி திறக்க அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக திமுக அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவி்க்கையில், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி வசம் ஒப்படைத்தாலும் மறுஉத்தரவு வரும் வரை மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 3 மாதங்களுக்கு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவை பிறப்பித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications