ஹாசினி கொலையாளி தஷ்வந்துக்கு தூக்கு உறுதி.. மேல்முறையீட்டு வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி
சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
Recommended Video

சென்னை: சிறுமி ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில், தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை மாங்காட்டில் 7 வயது கூட முழுமையாக நிரம்பாத சிறுமி ஹாசினியை தஷ்வந்த் பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தி இருக்கிறான். மேலும் குழந்தையை கொலை செய்து எரித்தும் இருக்கிறான். போலீசால் சிறைபிடிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் பெற்ற தாய் சரளாவையும் கொலை செய்தான்.

அதன்பின் கடைசியாக மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டான். ஹாசினி மற்றும் சரளா கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்தது.
5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி வேல்முருகன் கூறினார்.இதனால் அந்த பிரிவுகளின் கீழும் 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் கொடுக்கப்பட்டது. அதுஇல்லாமல் இரண்டு பிரிவுகளின் கீழ் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் மேல்முறையீடு செய்தான். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தஷ்வந்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
அதன்படி தற்போது செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக தஷ்வந்த் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications