மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Recommended Video

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்ற உத்தரவு மறு உத்தரவு வரும் வரை நீடிக்கப்படுகிறது என்று நீதிபதி துரைசாமி அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று (20ம் தேதி) வரையில் இடைக்கால தடை விதித்திருந்தது ஹைகோர்ட். இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கூடாது என உத்தரவு பிறப்பித்தார்.

தகுதி நீக்கம் உத்தரவு தங்களுக்கு நேரில் தரப்படவில்லை என்றும், பதிலளிக்க அவகாசம் தரப்படவில்லை என்றும், தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி அரசை காப்பாற்ற சபாநாயகர் முயல்வதாகவும், 18 பேரின் வழக்கறிஞரான துஷ்யந்த் தவே வாதிட்டார். இதை கேட்டறிந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னதாக சபாநாயகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சார்பில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீடிக்க ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்தால் அதை ஏற்க தயார் என உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் 2 வாரங்களுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறப்போவதில்லை. இதனால் ஆட்சிக்கு 2 வார காலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது தெளிவாகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications