மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை வேண்டும்.. அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை : மாஞ்சா நூல் தயாரிப்பை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் கோபிகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டம் பறக்க விடுவதற்கு தடை உள்ளது. இருந்தபோதிலும் மாஞ்சா நூலில் பட்டங்களை பறக்கவிடுவதும், அதனால் சிறிய குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழப்பதும் தொடர்கிறது.

அதனால், மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டங்களை பறக்க விடுவதற்கும், மாஞ்சா நூல் தயாரித்து விற்பதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும். சென்னையில் பட்டங்களை பறக்கவிட வார்டுக்கு ஒரு பாதுகாப்பான பிரத்யேக இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனுவுக்கு பதில் அளிக்குமாறு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "மாஞ்சா நூலைப் பயன்படுத்தி பட்டங்களை பறக்க விடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளுக்கு வழிவகை உள்ளது.
மனுதாரர் கோருவது போல சென்னையில் பட்டம் பறக்க விடுவதற்கென பிரத்யேக இடத்தை ஒதுக்குவது சாத்தியமில்லை. சென்னை காற்றாடி உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம், தமிழ்நாடு பட்டம் பறக்கவிடுவோர் சங்கம் ஆகியவை மாஞ்சா நூல் உற்பத்தி செய்யமாட்டோம் என்றும், அந்த நூலைப் பயன்படுத்தி பட்டம் பறக்கவிடமாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச், "இவ்வழக்கில் அரசு உள்துறை முதன்மைச் செயலாளர் தாக்கல் செய்த பதில் மனு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாஞ்சா நூல் விற்கும்போது அதைப் பறிமுதல் செய்வதைவிட, மாஞ்சா நூல் தயாரிப்பைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
-
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயங்க வேண்டுமா?- ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
திருப்பரங்குன்றம் மலை அளவீடு.. தொல்லியல் துறை சொன்ன தகவல்.. உடனே ஐகோர்ட் போட்ட உத்தரவு! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications