'லிங்கா'வுக்காக 'கபாலி'யை தடை செய்ய முடியாது.. ஹைகோர்ட் உத்தரவு... ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: உரிய இழப்பீடு வழங்காமல் கபாலியை ரிலீஸ் செய்யக் கூடாது என சுக்ரா பிலிம்ஸ் தொடர்ந்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், படத்தை வெளியிட தடையில்லை என அறிவித்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம் நாளை ரிலீசாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், லிங்கா பட விவகாரம் தொடர்பாக கபாலியை ரிலீஸ் செய்ய தடைகோரி நேற்று புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் நாளை கபாலி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது.

ரஜினி நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் வெளியான லிங்கா படம் நஷ்டம் அடைந்ததாக விநியோகஸ்தர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர். இது தொடர்பாக சுக்ரா பிலிம்ஸ் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது.
அதில், லிங்கா பிரச்னை தொடர்பாக உரிய இழப்பீடு வழங்கவில்லை என்றும், எனவே இழப்பீடு வழங்காமல் கபாலி படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சுக்ரா பிலிம்ஸ் குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக நாளைக்குள் ( இன்றுக்குள்) விளக்கம் அளிக்க சொல்லி நடிகர் ரஜினிகாந்த், லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தயாரிப்பாளர் தாணு உள்ளிட்ட 7 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கபாலி படத்தை வெளியிட தடையில்லை எனத் தெரிவித்தார்.
இதனால் கபாலி ரிலீசில் இருந்த பிரச்சினை தீர்ந்துள்ளது. நாளை திட்டமிட்டபடி கபாலி ரிலீசாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications