சென்னை விடாமல் கொட்டிய மழையால் ஸ்தம்பித்தது போக்குவரத்து... வீடு திரும்ப முடியாமல் மக்கள் அவதி
Recommended Video

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்தது.
இந்நிலையில் இன்று மாலை கருமேகங்கள் சூழ பலத்த காற்று வீசியது. இதைத் தொடர்ந்து முகப்பேர், அண்ணா நகர் , அம்பத்தூர், தியாகராய நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, கோயம்பேடு, மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

வானிலை ஆய்வு மையம்
குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதுமட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்பசலனத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசல்
இதனால் நாளையும் மழையை எதிர்ப்பார்க்கலாம் என்றே தெரிகிறது. வேலூரில் மழை: வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு சென்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்தம்பித்தது போக்குவரத்து
விடாமல் மழை கொட்டி வருவதால் பல இடங்களில் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் இன்னும் திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

மகிழ்ச்சி
காலை வேளையிலும் நல்ல இதமான வானிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்த மழையால் வெக்கையின்றி குளிர்ச்சி நிலவுகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications