மகனை கடத்திவிட்டு உல்லாசத்துக்கு அழைத்த கள்ளக்காதலன்... தாயின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை!
சென்னையை சேர்ந்த அரசு அதிகாரி மஞ்சுளாவின் மகனை கடத்திவிட்டு கள்ளக்காதலன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளான், ஆனால் இது குறித்து போலீசிடம் புகார் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்ததால் 9 வயது சிறுவன் ரித்தேஷ் ச
Recommended Video

சென்னை : சென்னையை சேர்ந்த அரசு அதிகாரி மஞ்சுளாவின் மகனை கடத்திவிட்டு கள்ளக்காதலன் உல்லாசத்திற்கு அழைத்துள்ளான், ஆனால் இது குறித்து போலீசிடம் புகார் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்ததால் 9 வயது சிறுவன் ரித்தேஷ் சாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சென்னை நெசப்பாக்கம் ஏழுமலை தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன், இவர் கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் செய்யும் பணிகளை செய்து வந்துள்ளார். இவரின் மனைவி மஞ்சுளா மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்துள்ளார்.
வியாபார ரீதியாக நாகராஜ் என்பவர் கார்த்திகேயன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். நாளடைவில் மஞ்சுளாவிற்கும் நாகராஜிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. கார்த்திகேயன் வீட்டில் இல்லாத சமயத்தில் நாகராஜும் மஞ்சுளாவும் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்.

கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்திய சிறுவன்
இவர்களின் தொடர்பை 9 வயது ரித்தேஷ் சாய் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மனைவியுடனான தொடர்பை துண்டிக்குமாறு நாகராஜை கார்த்திகேயன் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாகராஜ் கைது செய்து ஜாமினில் வெளி வந்துள்ளார்.

கள்ளத்தொடர்பை தொடர முடியவில்லை
ஜாமினில் வந்த பின்னரும் மஞ்சுளாவுடனான உறவை நீடிக்க நாகராஜ் விரும்பியுள்ளார். ஆனால் மஞ்சுளா நாகராஜை கைகழுவிவிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் இந்த எல்லா பிரச்னைக்குமே சிறுவன் ரித்தேஷ் சாய் தான் காரணம் என நினைத்து டியூஷன் சென்டரில் இருந்து அவனை கடத்தியுள்ளான்.

பணம் கேட்டு மிரட்டல்
சிறுவனை கடத்திய கையோடு மஞ்சுளாவை போனில் தொடர்பு கொண்டு உனது மகனை கடத்திவிட்டேன். நீ என்னுடன் வரவேண்டும், இல்லாவிட்டால் ரூ. 3 லட்சம் பணம் கொடு என்று மிரட்டியுள்ளான். ஒருவேளை வரவில்லை என்றால் மகனை கொன்றுவிடுவதாகவும் நாகராஜ் எச்சரித்துள்ளான்.

மஞ்சுளாவின் அலட்சியம்
நாகராஜின் மிரட்டலை மஞ்சுளா அலட்சியப்படுத்தியதாலேயே சிறுவன் ரித்தேஷ் சாய் கொல்லப்பட்டுள்ளான். மிரட்டல் போன் பற்றி கணவர் கார்த்திகேயனிடம் கூறிய மஞ்சுளா போலீசாரிடம் புகார் செய்ய வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஒரு வேளை போலீசாரிடம் முன்கூட்டியே புகார் அளித்திருந்தால் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டிருப்பான். தாயின் தவறான பழக்கத்தால் அநியாயமாக ஒரு சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications