சென்னையில் மட்டன் பிரியாணி சாப்பிட்டு, மாம்பழங்கள் வாங்கிய ப்ராவோ!
சென்னை: என் சொந்த ஊரான ட்ரினிடாட் டொபாக்கோ போலவே சென்னையும் இருக்கிறது. இங்கு ஒரு நடனப்பள்ளி தொடங்கும் யோசனை உள்ளது, என்றார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ட்வைன் பிராவோ.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்வைன் பிராவோ மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டும் அல்ல. சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர்.
நடிப்பிலும் ஆர்வம் கொண்ட பிராவோ, சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'உலா' என்ற தமிழ்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சலோ சலோ
சென்னையில் நேற்று பிராவோ இசையமைத்து வெளியிட்ட 'சலோ சலோ' ஆல்பம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கரீபியன் இசையை வெஸ்டர்ன் மியூசிக்கோடு கலந்து, இந்திய இசையையும் இணைத்து இந்த ஆல்பம் தயாரிக்கப்பட்டுள்ளது. வெளியீட்டு விழாவில் சென்னை அணியின் கேப்டன் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்றனர்.

உலகக் கோப்பை
இந்திய பாணியில் மஞ்சள் நிற ஷெர்வானி அணிந்து விழாவில் கலந்து கொண்ட பிராவோ பேசுகையில், ''உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் கிடைக்காதது மிகுந்த வருத்தத்தை அளித்தது.

உலா
ஆனால் அந்த 2 மாத காலத்தையும் எனது இசைப்பயணத்திற்கு பயன்படுத்தி கொண்டேன். தமிழ் சினிமாவை பொறுத்தவரை 'உலா' என்ற படத்தில் நடித்துள்ளேன். அதற்கு பின் வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.எனது நடிப்பும் நடனமும் தமிழ் மக்களுக்கு பிடிக்கும் என்று கருதுகிறேன்.

நடனப் பள்ளி
சென்னை எனக்கு மிகவும் பிடித்த நகரம். டிரினிடாட் டொபாக்கோ போலவே இங்குள்ள மக்களும் இசையை மிகவும் நேசிக்கிறார்கள். விரைவில் சென்னையில் ஒரு நடனப்பள்ளியை தொடங்கவுள்ளேன்.

ரஜினியைப் பிடிக்கும்
இந்திய இசையை நான் மிகவும் விரும்புகிறேன். ரிங்க...ரிங்கா.. மற்றும் லுங்கி டான்ஸ் பாடல் எனக்கு பிடித்ததாகும். சூப்பர் ஸ்டார் ரஜினியை மிகவும் பிடிக்கும்

மட்டன் பிரியாணி
சென்னையில் எனக்கு பிடித்த உணவு மட்டன் பிரியாணியாகும். இங்குள்ள தெருக்களில் நடந்து சென்று மாம்பழங்களை வாங்கி சென்று இருக்கிறேன்,'' என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications