For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

களைகட்டும் காணும் பொங்கல்... சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டுகளுக்கு மக்கள் குடும்பத்தோடு படையெடுத்து வருகின்றனர்.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் களைகட்டிய காணும் பொங்கல்

    சென்னை: பொங்கல்பண்டிகையின் கடைசி நாளான காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் மக்கள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாதலங்களுக்கு சென்று தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    காணும் பொங்கல் என்றாலே தமிழர்களின் மனதில் எப்போது ஒரு சந்தோஷம் தொற்றிக்கொள்ளும். உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரையும் இந்த நாளில் கண்டு மகிழ்ந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்வதில் எப்போதும் தமிழர்களுக்கு தனி ஆர்வம் தான். குறிப்பாகமூத்தவர்களிடமிருந்து ஆசீர்வாதத்துடன் பணத்தையும் வாங்கி அதனை செல்வு செய்வதில் இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் தனி சந்தோஷம் தான்.

    இந்தாண்டு வழக்கம் போல காணும் பொங்கல் காலை முதலே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. வெளியூர்மக்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், சென்னைமக்களுக்கே சென்னை சொந்தம் என்பது போல, உற்சாகத்தோடுதங்களின் சொந்த ஊரை சுற்றி வருகிறார்கள் சென்னைவாசிகள்.

    பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பாக பல்வேறு ஏற்பாடுகளும், சிறப்புவசதிகளும் காணும் பொங்கலான இன்று செய்யப்பட்டுள்ளது.

     பேருந்து வசதி

    பேருந்து வசதி

    சென்னையில் உள்ள சுற்றுலாதலங்களுக்கு என்று தனியாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. கடற்கரை, அடையாறு பூங்கா, பாம்புபண்ணை, வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்டவைகளுக்கென்றே தனியாக சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     கடற்கரையில் குவியும் மக்கள்

    கடற்கரையில் குவியும் மக்கள்

    சென்னை மெரினாக் கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் எலியட் கடற்கரையில் காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இதனை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் கடற்கரை முழுவதும் பொதுமக்கள் கடல்நீரில் இறங்காத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. போர் நினைவுச்சின்னம் முதல் எலியட் கடற்கரை வரையுள்ள பகுதிகளில் மூவாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோரக் காவல்படையைச் சேர்ந்த நீச்சல் பயிற்சிபெற்ற கமாண்டோ வீரர்கள் நூறுபேர் கடலோரத்தில் சுற்றுக்காவலில் ஈடுபடு வருகின்றனர்.

     வண்டலூரில்குவியும் மக்கள்

    வண்டலூரில்குவியும் மக்கள்

    காணும்பொங்கலை முன்னிட்டு தாம்பரத்தை அடுத்த வண்டலூர் பூங்காவில்ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் என்று ஏராளமான உயிரினங்கள்வசித்து வரும் இந்த பூங்காவில்குழந்தைகளுக்கான பிரத்யேக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு, இணையதளம்மூலமாக நுழைவு சீட்டு முன்பதிவு செய்யும் முறையையும் பூங்கா நிர்வாகம் இந்தாண்டுஅறிமுகம் செய்திருந்தது.

     கேளிக்கை பூங்காக்களில் கொண்டாட்டம்

    கேளிக்கை பூங்காக்களில் கொண்டாட்டம்

    சென்னைகிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில்உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக் காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி பாம்பு பண்ணை, மாமல்லபுரம்கடற்கரை போன்ற பகுதிகளில் மக்கள்கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கேளிக்கை பூங்காகளுக்கு மக்கள் குடும்பத்தோடு படையெடுத்து வருகின்றனர்.

     திரையரங்குகளில்கூட்டம்

    திரையரங்குகளில்கூட்டம்

    பொங்கலையொட்டிவெளியான படங்களை காண இளைஞர்களும், மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூர்யா, பிரபுதேவா, விக்ரம் உள்ளிட்ட ஹீரோக்கள்நடித்த படங்களை காண திரையரங்குகள்மற்றும் மல்டிஃபிளக்ஸ் மால்களிலும் மக்கள் கூட்டம் பெருமளவுகாணப்படுகிறது. மல்டிஃபிளக்ஸ் மால்களில் விளையாட்டு அரங்கங்களும் உணவகங்களுக்கும் உள்ளதால் உயர்தர நடுத்தர வர்க்கத்தினர்இவற்றை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

     தீவிர கண்காணிப்பில் போலீசார்

    தீவிர கண்காணிப்பில் போலீசார்

    பொதுஇடங்களில் கூட்ட நெரிசல்கள் அதிகளவுகாணப்படுவதால், முக்கிய இடங்களை ஹெலிகாப்டர்மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கடலில் குளிப்பதற்கும் படகுசவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம், பழவேற் காடு பகுதிகளில் கடலில்குளிக்கவும், படகு சவாரி செய்யவும்தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவு வருவார்கள்என்ப தால் அங்கு போலீஸார்பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

     போக்குவரத்து மாற்றப்பட்டன

    போக்குவரத்து மாற்றப்பட்டன

    காணும்பொங்கலை முன்னிட்டு காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, உழைப்பாளர்சிலை மற்றும் கண்ணகி சிலைஉள்ளிட்ட பகுதிக்கு அருகே போக்குவரத்து மாற்றம்செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைபொறுத்தே இந்த மாற்றம் அமையும்என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் முழுஅளவில் கூட்டம் வரும் என்பதால்அப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Chennai is Stunned with the Kannum Pongal Celebration. As it is expected lakhs of people will come to the seashores, so thousands of Police are in the security check
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X