கோவையில் தரையில் உருண்டு போராடிய மாணவர்கள் - குண்டுகட்டாக அள்ளிய போலீஸ்
அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை, கோவையில் போராட்டம நடத்திய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை/ கோவை: அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட்டம் நடத்தி வரும் மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

மாணவர்கள் தரையில் விழுந்து படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மாணவர்களை வலுக்கட்டாமாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பல மாணவிகள் தரையில் படுத்துக்கொண்டு எழுந்திருக்க மறுத்தனர். அவர்களையும் பெண் காவலர்கள் கெஞ்சி எழுப்பி சென்றனர்.
இதனிடையே சென்னை மந்தைவெளியில் இளைஞர்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக கொடி, மோடி உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications