தாலியைப் பறித்த திருடர்களிடம் தீரத்துடன் போராடிய பெண்... சங்கிலி பறிபோனது!
பெரம்பூர்: சென்னையில் ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறிக்க முயன்ற திருடர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பெண்மணி ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் சங்கிலி தொடர் போல் தினமும் நடந்து கொண்டே இருக்கிறது.
கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் 3 ஆவது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் செல்வமணி . இவரது மனைவி எம்ரோஸ் . நேற்று இரவு 9 மணியளவில் தெருவில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் எம்ரோஸ் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறித்தனர். சங்கிலியை கையில் பிடித்த எம்ரோஸ் "திருடன் திருடன்" என்று கத்திக் கொண்டே தாலியை காப்பாற்ற போராடினார்.
ஆனால் சுதாரித்த கொள்ளையர்கள் தாலி சங்கிலியை வேகமாக பிடித்து இழுத்து அறுத்தனர். இதில் எம்ரோஸ் தடுமாறி கீழே விழுந்தார். கொள்ளையர்கள் 5 பவுன் சங்கிலியுடன் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
காயமடைந்த ரோஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பில் மூழ்கியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications