பணம் இல்லாத ஏடிஎம் எந்திரம்.. ஆத்திரத்தில் உடைத்த சென்னை நபர்
ஏடிஎம் எந்திரத்தில் பணம் இல்லாத கோபத்தில் அந்த எந்திரத்தை உடைத்த சென்னை நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: பணம் எடுக்க வந்த இடத்தில் ஏடிஎம் எந்திரத்தில் பணம் இல்லாததால் ஏமாற்றமும், ஆத்திரமும் அடைந்த நபர் ஒருவர் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து விட்டுச் சென்றுள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். பணப் பற்றாக்குறை தீரவில்லை. இன்னும் ஏடிஎம் எந்திரங்களில் இயல்பு நிலை திரும்பவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் போதிய அளவு பணம் போடப்படுவதில்லை. அதே போல பல மையங்களில் 2000 ரூபாய் நோட்டுக்கள்தான் அதிகம் வருகின்றன. இதனால் மக்கள் எரிச்சலில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு ஒருவர் வந்துள்ளார்.
பணம் எடுக்க வந்த அவர் பணம் இல்லாமல் இருந்ததால் கோபமடைந்து முன்பக்க எந்திரத்தை உடைத்து விட்டு போய் விட்டார். இன்று காலைதான் எந்திரம் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. முதலில் கொள்ளையடிக்க நடந்த முயற்சியா என்று சந்தேகிக்கப்பட்டது. ஆனால் இரவு முதலே அதில் பணம் இல்லை என்பதால் பணம் எடுக்க வந்தவர் தான் ஏமாற்றத்தில் உடைத்திருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டது.அதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மையத்தில் உள்ள சிசிடிவி பதிவை வைத்து சம்பந்தப்பட்ட நபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications