“எனக்கு அவளும், அவளுக்கு நானுமே ஊன்றுகோல்” – நெகிழவைத்த 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணம்!
சென்னை: சென்னையில் இன்று மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.
சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று திறனாளிகள் திருமணத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இந்த ஆண்டும் 58 ஜோடிகளை சுயம்வரம் மூலம் தேர்வு செய்தது. அவர்களுக்கான திருமணம் கீதா பவனில் இன்று நடந்தது.

ஜோடி சூப்பர் ஜோடி:
எல்லா மணமக்களும் மண்டபத்தில் ஜோடி, ஜோடியாக அமர வைக்கப்பட்டனர்.

மாங்கல்யம் தந்துனானே:
பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப்புடவையுடன் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்த ஜோடிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது.

கட்டித் தழுவி ஆனந்தக் கண்ணீர்:
திருச்சியைச் சேர்ந்த சக்திவேல், சங்கீதா தம்பதிகள் இருவரும் பார்வையிழந்தவர்கள். மணமாலை சூடியதும் மனக்கண்ணில் தன் துணையை நினைத்து கொண்டே ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

அவளுக்கு நானும், எனக்கு அவளும்:
கால்களை போலியோவுக்கு பறிகொடுத்த சங்கரும், எஸ்தரும் ஊன்றுகோல் உதவியுடன் மணமேடைக்கு வந்து மாலை சூடினார்கள். இனி எனக்கு அவளும், அவளுக்கு நானும் ஊன்றுகோலாய் இருப்போம் என்றார்கள் மகிழ்ச்சியுடன்.

குணத்தால் ஈர்க்கப்பட்டவர்:
கால்களை இழந்தும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தி.நகர் அரிபாபுவுக்கும் தங்கசாலையில் அரசு அச்சகத்தில் பணியாற்றும் ராதிகாவும் திருமணம் செய்து கொண்டனர். எனக்கு ஊனம் பெரிதல்ல அவரது குணம்தான் என்னை கவர்ந்தது என்று நெகிழ்ந்தார் ராதிகா.

மாமாவுக்கு நானே என்றும் துணை:
சோழவரம் சுதாகர் கால்களை இழந்தாலும் மனம் தளராமல் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது அக்காள் மகள் சந்திரலேகா. எந்த குறையும் இல்லாதவர். மாமாவுக்கு துணையாக என்றும் இருப்பேன் என்று சுதாகருக்கு கழுத்தை நீட்டினார்.

மனதார மாங்கல்யம்:
நாகர்கோவிலைச் சேர்ந்த கணபதிக்கு கையில் ஊனம். திருவண்ணாமலை பாஞ்சாலிக்கு கால் ஊனம். இருவரும் சுயம்வரத்தில் ஒருவரையொருவர் மனதாக ஏற்றுக் கொண்டனர்.

நெகிழ வைத்த திருமணம்:
மாற்று திறனாளிகள் இல்லாத 7 ஆண்களும், 21 பெண்களும் மாற்று திறனாளிகளை தங்கள் துணையாக ஏற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications