ஆலந்தூர்- பரங்கிமலை மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்... இன்று நடந்தது!
சென்னை: சென்னை ஆலந்தூர்- பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், அடுத்த கட்டமாக ஆலந்தூர் - பரங்கிமலை இடையே இன்று மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது. இது, சென்னை வண்ணாரப்பேட்டை-விமான நிலையம் நடைபாதையின் நீட்டிக்கப்பட்ட சைதாப்பேட்டை-ஆலந்தூர்-விமான நிலையம் தடத்தின் ஒரு பகுதி ஆகும்.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரி கூறுகையில், "மெட்ரோ ரயில் பரங்கி மலை நிலையத்துக்கு பிரச்னைகள் இல்லாமல் இயல்பாக சென்றடைந்தது. வரும் நாட்களில் மேலும் சில சோதனை ஓட்டங்கள் நடைபெறும்" என்றார்.
இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு, மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையரிடம் அனுமதி பெற்றிட வேண்டும். அதற்கு மேலும் இதுபோன்று பல வகையான சோதனை ஓட்டங்கள் மற்றும் பரிசோதனைகள் மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனை ஓட்டங்கள் முடிந்து அடுத்தாண்டு முதல் இந்தப் பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications