சென்னை மெட்ரோ ரயில்... ஒரே மாதத்தில் ரூ.3 கோடி வசூலை அள்ளியது
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கடந்த ஒரு மாதத்தில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 30ம் தேதி சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவை நடந்து வருகிறது.
சென்னையின் புதிய சுற்றுலாத் தளமாகவே மெட்ரோ ரயில் மாறி விட்டது எனக் கூறினால் மிகையில்லை. அந்தளவுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதை மக்கள் விரும்புகின்றனர். பணி நிமித்தமாக மெட்ரோ ரயிலில் பயணம் செல்பவர்கள் மட்டுமின்றி, புதிய அனுபவத்திற்காகவும் அதில் தினந்தோறும் ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், தொடக்க நாளன்று மட்டும் ரூ. 16.77 லட்சம் வசூலானது. அதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் 3.26 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததைத் தொடர்ந்து, ரூ. 1.08 கோடி வருவாய் கிடைத்தது.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் தனது பயணத்தைத் தொடங்கி ஒரு மாத காலம் முடிவடைந்து விட்டது. இந்த ஒரு மாதத்தில் ரூ. 3 கோடி வருவாய் மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

முதல் சனி, ஞாயிறுகளில் மட்டும்...
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், "சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 1.56 லட்சம் பேர் பயணம் செய்ததில் ரூ.48.6 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளது.

விடுமுறை நாட்களில்...
அதுவும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலை பார்ப்பதற்காக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிகம் வருகை தந்தனர்.

மழையால் குறைந்த கூட்டம்...
தொடர்ந்து வந்த நாட்களில் மழை போன்ற பல்வேறு காரணங்களால் கூட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. இதனால் வசூலும் சற்று குறைந்தது.

ரூ. 3 கோடி முதல்...
முதல் மாதத்தில் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை வருவாய் கிடைத்திருக்க வாய்ப்பு உள்ளது. சரியான தொகை எவ்வளவு என்பது குறித்து ஓரிரு நாட்களில் தெரியவரும்.

10 லட்சம் பேர்...
ரயில் போக்குவரத்துத் தொடங்கிய முதல் மாதத்தில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்" என இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications