வற்றும் சென்னை ஏரிகள் – கிருஷ்ணா நீர் கேட்டு ஆந்திராவிற்கு தமிழகம் கடிதம்
சென்னை: சென்னை நகர மக்களின் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் கிருஷ்ணா அணையின் தண்ணீரைக் கேட்டு தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சென்னை நகரத்தைப் பொறுத்த வரை குடிநீர் விநியோகம் புழல், வீராணம் போன்ற ஏரிகளில் இருந்துதான் பெரும்பாலும் கிடைத்து வருகின்றது. இதுபோக இரண்டு இடங்களில் கடல் நீரில் இருந்து குடிநீர் திட்டத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்றது.
தற்போது குடிநீர் ஆதார ஏரிகளில் தண்ணீர் வேகமாக குறைந்து வறண்டு வருவதால் வீராணம் ஏரி தண்ணீர்தான் கை கொடுக்கிறது.
ஏரிகளில் தண்ணீர் கடுமையாக குறைந்து வருகின்ற காரணத்தால் ஆந்திர அரசுக்கு தமிழகஅதிகாரிகள் கடிதம் எழுதி ஜூலை முதல் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்டுள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டில் மழை பெய்யாதது போல் ஆந்திராவிலும் இப்போது மழை இல்லை. இதனால் ஆந்திர அதிகாரிகள் ஜூலை 15 ஆம் தேதிக்கு பிறகுதான் தண்ணீர் திறப்பது குறித்து முடிவு செய்வார்கள் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் சென்னை ஏரிகளில் 3 மாதத்திற்குத் தேவையான தண்ணீர்தான் உள்ளது. கிருஷ்ணா நீர்வரத்து கிடைத்தால்தான் அதன்பின்னர் சமாளிக்க முடியும் என்று தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications