சென்னை ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தாா் வாவ்ரிங்கா !
சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் வாவ்ரின்கா போர்னா கோரிக்கும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் 20வது சென்னை ஓபன் டென்னிஸ் நடந்து வருகிறது தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த ஒற்றையர் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா, தனது நண்பரான 19-ம் நிலை வீரர் பெனோய்ட் பேரை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.

உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள வாவ்ரிங்கா, எதிர்பார்த்தது போலவே தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினார். 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெனோய்ட் பேரை சுலபமாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார் வாவ்ரிங்கா.
மற்றொரு அரையிறுதியில் போர்னா கோரிச் 7-6 (5), 6-7 (5), 6-3 என்ற செட் கணக்கில் பெடேனை வீழ்த்தி முதல் முறையாக இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார். சென்னை ஓபனில் நீண்ட நேரம் நடந்த ஆட்டங்களில் ஒன்றாகவும் இது அமைந்தது.
19 வயதான போர்னா கோரிச், சென்னை ஓபன் இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவை எதிர்கொள்ள விரும்புவதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூடியிருந்தார். அவரது ஆசைப்படியே இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் அவர் வாவ்ரிங்காவுடன் மோதுகிறார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் சென்னை ஓபன் இறுதிப் போட்டியில் பட்டம் வெல்லப்போவது யார் என்பது குறித்த பரபரப்பு எழுந்துள்ளது.
-
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications